வீட்டிற்கு செல்ல விரும்பிய பெண்ணை கழுத்து நெரித்து கொலை செய்த கொடூரக் காதலன்...! அதிர்ச்சி சம்பவம்..!

Uttar Pradesh Viral Photos
By Nandhini Dec 27, 2022 12:01 PM GMT
Report

வீட்டில் செல்ல விரும்பிய பெண்ணை, கள்ளக்காதலன் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்து நெரித்து கொலை செய்த கள்ளக்காதலன்

உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர் ரச்சனா. இவர் திருமணமானவர். ரச்சனாவிற்கும், கவுதம் சிங் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து, இருவரும் காசியாபாத்தில் உள்ள OYO ஹோட்டலில் ரச்சனாவும், கவுதம்சிங் தனிமையில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, நேரம் ஆனதால் ரச்சனா வீட்டிற்கு செல்ல விரும்பினாள்.

அப்போது, கள்ளக்காதலன் கவுதம்சிங்கிற்கும், ரச்சனாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி பயங்கர சண்டை வெடித்தது. இந்த சண்டையில் கோபமடைந்த கவுதம்சிங் ரச்சனாவின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதில், ரச்சனா சம்பவ இடத்திலேயே மூச்சு அடைத்து உயிரிழந்தார். சந்தேகமடைந்த OYO ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கவுதம் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.     

murdered-ghaziabad-oyo-hotel-boyfriend-arrested