ரவுடி மனைவியுடன் கள்ள உறவு .. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய புல்லட் ராஜா .. பகீர் கொலை சம்பவம்
திருச்சி அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த புல்லட் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.
தாகத உறவு
திருச்சி மாவட்டம் மண்ணச்சந்ல்லூர் காமாராஜர் காலனியே சேர்ந்தவர் சின்னராசு ,இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானார்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த புல்லட் ராஜா என்பவரின் மனைவி கிருஷ்ணவேணிக்கும் சின்ராசுவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களில் புல்லட் ராஜாவின் மனைவி கிருஷ்ணவேனியை சின்ராசு தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சின்ராசு மீது கடும் கோபத்தில் இருந்த புல்லட் ராஜா சரியான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
கள்ளகாதலர் கொலை
இந்த நிலையில் நேற்று இரவு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சின்ராசு புல்லட்ராஜவின் மனைவி கிருஷ்ணவேனியுடன் தனது அக்கா அவர்து கணவருடன் சாமி தரிசனம் செய்ய சின்ராசு ஆட்டோவில் சென்றார். அப்போது சமயபுரம் கோவில்லுக்கு வந்த புல்லட் ராஜா சின்ராசுவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றி போகவே புல்லட் ராஜா தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்ராசுவின் கழுத்தில் குத்தி காயப்படுத்தினார், இதில் சம்பவ இடத்திலேயே சின்ராசு பலியானார்.
சிக்கிய புல்லட் ராஜா
உடனே அங்கிருந்து தப்பும் புல்லட் ராஜா தனது மனைவி கிருஷ்ணவேனியை இழுத்துக்கொண்டு தலைமறைவானார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வலைவீசி புல்லட் ராஜாவை தேடி வந்தனர்.
இந்த சின்ராசுவின் அண்ணன் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் புல்லட் ராஜாவை சமயபுரம் காவல் ஆணையர் கருணாகரன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.