தம்பி மீது வைத்த குறி தப்பியதால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் அண்ணனை ஒட ஒட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது!
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்.இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.இவருக்கு அக்கா,தங்கை,அண்ணன்,தம்பி என உடன் பிறந்தோர் என மொத்தம் 11பேர் உள்ளனர்.தம்பி ரகு மீது 2 கொலை வழக்குகள் உள்ளது.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு பிரபல ரவுடிகள் தினேஷ் மற்றும் தியாகுவின் கூட்டாளிகளான பிரபாகர் என்பவரின் அண்ணனை வெட்டி படுகொலை செய்தார்.அதனைதொடர்ந்து பிரபாகரன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு ரகுவின் பிறந்த அண்ணனும் தேமுதிக-வின் கழக பேச்சாளருமான சரவனணை வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி அனைவரும் கைது செய்யபப்பட்டு சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தனர்.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு மரணமடைந்த செந்திலின் தந்தை நடராஜன் அவர்களின் 13 ம் நாள் காரியத்திற்காக நேற்று நள்ளிரவு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி பேசி கொண்டிருந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட மர்ம கும்பல் ஒன்று ரகுவின் தாய் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி பட்டகத்தியுடன் குதித்தனர். ஆவேசத்துடன் வந்த மர்ம கும்பல் அங்கு அமர்ந்து இருந்த அனைவரையும் தாக்கத் தொடங்கினர்.
அதிலும் ரகுவை குறிவைத்து தாக்க துவங்கிய போது சுவர் ஏறி குதித்து ரகு தப்பித்து ஓடிவிட்டார். இந்த சப்தத்தைக் கேட்டு தடுக்க ஒடி வந்த அண்ணன் செந்தில்குமார் மர்ம கும்பலிடம் மாட்டி கொண்டார். செந்தில் குமாரை வளைத்த மர்ம கும்பல் சுமார் 100மீட்டர் தூரம் சாலையிலேயே ஓட ஓட துரத்தி தாக்கினர்.தனது உயிரை காப்பாற்றி கொள்ள தலைதெறிக்க ஓடிய செந்தில் குமார் அங்கிருந்த ஒரு முட்டு சந்தில் வசமாக மாட்டி கொண்டார்.கஞ்சா போதையுடன் வெறிதனமாக பின்தொடர்ந்து ஒடி வந்த மர்ம கும்பல் முட்டு சந்தில் மாட்டிய செந்தில் குமாரை சரமாமரியாக வெட்டி சாய்த்தது.
மேலும் ஆவேசம் தனியாத அந்த மர்ம கும்பல் அங்கிருந்த பாறாங்கல் மற்றும் உருட்டை கட்டையால் உயிர் போகும் வரை அடித்து கொன்று விட்டு தப்பி ஓடியது. மேலும் மர்ம கும்பல் தாக்கியதில் செந்திலின் சகோதரிகள், மனைவி மற்றும் மருமகன் என நால்வர் காயமடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களும்,தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
தப்பி ஒடிய கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கு தொடர்பாக ஐந்து நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக ரகுவை கொல்ல குறி வைத்து வந்த கும்பலிடம் ரகு மாட்டாமல் தப்பியதால் அப்பாவியான அண்ணன் கும்பலிடம் சிக்கி கொண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.