ஆத்தாடி...கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 பேரை தீர்த்துக் கட்டிய பெண்
கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 பேரை சம்பந்தப்பட்ட பெண் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தின் ஸ்ரீரங்கபாட்டனாவை அடுத்த கே.ஆர்.எஸ் பகுதியில் கங்காராம் என்பவர் மனைவி லட்சுமி மற்றும் ராஜ், கோமல், குணால் ஆகிய மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வரும் கங்காராம் வெளி மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் செய்வதால் மாதம் இருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் கங்காராம் வியாபாரத்திற்கு வேண்டி வெளியூர் சென்றுள்ளார்.
அப்போது டும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டனர். நகைக்காக கொள்ளையர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கங்காராமுக்கு அவர் வசிக்கும் பகுதியில் லட்சுமி என்ற வேறு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மனைவி லட்சுமிக்கு செய்தி கிடைக்க கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்காதலி லட்சுமியை கங்காராம் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கங்காராம் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கங்காராம் வேலைக்கு சென்ற நேரத்தில் 2 கூலிப்படையை வைத்து கங்காராமின் மனைவி, 3 குழந்தைகள் லட்சுமியின் அண்ணன் மகன் உட்பட 5 பேரை தீர்த்துக்கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் லட்சுமி சந்தேகப்படும் வகையில் அழுதது தான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை உண்டாக்கி அவர் வசமாக சிக்கியதற்கு காரணமாக கூறப்படுகிறது.