நடுரோட்டில் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம் - தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை நேர்ந்த கொடூரம் - அதிர்ச்சி சம்பவம்
புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சதீஷ் (எ) மணிகண்டன் (28), இவர் ஏசி மெக்கானிக்கானிக் வேலை பார்த்து வந்தார்.
சதீஷுக்கு மதிவதனா என்ற பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷின் எதிர்வீட்டை சேர்ந்த சங்கர் (35), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் திருமண நாளையொட்டி தெருவில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.
அப்போது, ரமணியின் தம்பி ராஜா (26) மற்றும் அவரது நண்பர்கள் அசார் (23), தமிழ்செல்வன் (23) ஆகியோர் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் தட்டிக்கேட்டனர். இதனால், அவர்களுக்குள் சதீஷூக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து சதீஷின் வீட்டுக்கு சென்ற ராஜா, அவரின் மாமா சங்கர், அசார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சதீஷை கத்தியால் தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் சதீஷ் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, சதீஷை உறவினர்கள் உடனடியாக மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது.
இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சதீஷின் தந்தை வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்த போலீசார் சங்கர்-ரமணி தம்பதியினர் உட்பட 5 பேர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.