கட்டிட ஒப்பந்தகாரர் சரமாரி வெட்டி படுகொலை - சிறுநீர் கழிக்க சென்ற போது பரிதாபம்! முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்!
நெல்லையில் சிறுநீர் கழிக்க சென்ற கட்டிட ஒப்பந்தகாரர், மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த கண்ணன், சிறிய அளவிலான வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டிகொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு வசித்து நிலையில், நேற்று சிறுநீர் கழிக்க முட்பதருக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், கண்ணனை அடையாளம் தெரியாத அளவிற்கு கை, கால், முகம் என சரமாரியாக வெட்டி, உடலை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில்
மிதந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு மர்மநபர்கள் குறித்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.