மதுரையில் முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்து கொலை - போலீசார் விசாரணை

Murder Madurai
By Thahir Jun 20, 2021 08:01 AM GMT
Report

மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் வசித்து வரும் முகமது சையது ஈசாக் என்ற வாலிபர் மதுரை பழங்காநத்தம் விகேபி நகர் பகுதியில் உள்ள விவசாய நிலைங்களில் மர்மமான நிலையில் இறந்து கிடப்பதாக எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் மற்றும் மாநகர் சட்ட ஒழுங்கு துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் விசாரணை மேற்கொண்டு, தொடர்ந்து மேப்பநாயை வரவலைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் மீது பல்வேறு திருட்டு வழக்கு இருப்பதாகவும் முன் விரோத காரணமாக கொலை செய்யப்பட்டாரா இல்லை.? வேற எதுவும் காரணமாக இருக்குமா..? என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.