தாயை திட்டிக் கொண்டிருந்த தந்தையின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த மகன் - அதிர்ச்சி சம்பவம்

murder father killed son arrest
By Nandhini Jan 10, 2022 05:24 AM GMT
Report

தாயை திட்டியதால் ஆத்திரமடைந்த மகன் கத்தியால் தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அடுத்த சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சங்கிலி முருகன் என்ற மகன் உள்ளார்.

கொத்தனார் வேலை செய்து வந்த தர்மராஜ் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் பணம் கேட்டு சண்டை போடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் தர்மராஜ். அப்போது மனைவியை கண்டபடி திட்டித் தீர்த்துள்ளார் தர்மராஜ்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மகன் சங்கிலி முருகன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை சராமரியாக அறுத்து முதுகில் ஆவேசமாக குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் தர்மராஜ். இதனையடுத்து, அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார் மீனா. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தர்மராஜ் உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.