மருமகளை தற்கொலைக்கு தூண்டிய மாமியார்..பகீர் பின்னணி!
புதுப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கே.கே நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ பட்டதாரியான இவருக்கும் திருமுல்லைவாயலை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பாலமுருகன் அவரது தாயார் அம்சாவும் சேர்ந்து வீட்டு கடனை அடைக்க பணம் பெற்று தருமாறு ஜோதிஸ்ரீயிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் அடைக்கலம் ஆனார்.
இதனையடுத்து கடந்த ஏப்ரம் மாதம் பாலமுருகன் வீட்டுக்கு சென்ற நிலையில் ஜோதிஸ்ரீயை வீட்டினுள் அனுமதிக்க முடியாது என மாமியார் அம்சா கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடந்த ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஜோதிஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் தனது இறப்புக்கு மாமியார் மற்றும் கணவர் தான் காரணம் என கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து பாலமுருகன், அவரது அண்ணன் சத்யராஜ் மற்றும் அம்சாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.