சேலத்தில் பயங்கரம் : நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி
சேலத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியை கொல்ல முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.
ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி பொன்பாண்டியனை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கொலை செய்ய முயற்சித்ததால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
பணி மாறுதலால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நீதிபதியை கொலை செய்ய பிரகாஷ் முயற்சித்துள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த சம்பவத்தில் லேசான காயத்துடன் நீதிபதி பொன்பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நீதிமன்ற வளாகத்திலேயே நடந்தேறிய இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கைது செய்யப்பட்ட அலுவலக உதவியாளர் பிரகாஷிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.