“சிறுவர் சிறுமி பிணத்துடன் காரில் சுற்றிய பெண்!
தன்னுடைய சகோதரி குழந்தைகளை கொன்று அந்த பிணத்துடன் காரில் சுற்றிய ஒரு பெண்ணை போலீஸ் கைது செய்தது .
அமெரிக்காவில் நிக்கோல் ஜான்சன் என்ற பெண் கிழக்கு கடற்கரை நகரமான பால்டிமோவில் வசிக்கிறார் ,இவரிடம் அவரின் சகோதரி தன்னுடைய ஏழு வயது மகள் மற்றும் ஐந்து வயது மகன் ஆகியோரை அவரின் பாராமரிப்பில் வளர்க்கும்படி 2019ம் ஆண்டில் விட்டு சென்றார் .அதன் பிறகு அந்த பெண் கடந்த ஆண்டு மே மாதம் அந்த இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார் .பின்னர் அந்த இருவரின் உடலையும் ஒரு ட்ரங்கு பெட்டியில் வைத்து அடைத்து அதை காரில் போட்டு பூட்டியுள்ளார் .ஒரு வருடம் கழித்து அவளது சிறுவனின் உடலை ,சிதைந்த சகோதரிக்கு அருகில் வைத்து, ஒரு பிளாஸ்டிக் பையில் போர்த்தியுள்ளார் பிறகு அவர்களின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து அதை காரில் வைத்து கொண்டு அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றி வந்துள்ளார் .
பிறகு கடந்த புதன்கிழமையன்று அந்த பெண் காரில் வேகமாக போனதால் அமெரிக்க போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் .பின்னர் போலீசார் அவரின் காரை சோதனையிட்டபோது அந்த காரில் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் போர்த்தப்பட்டிருப்பதை கண்டு அதிச்சியுற்றனர் .பிறகு போலீசார் அந்த பெண்ணை கொலை வழக்கில் கைது செய்து விசாரித்தனர்
அப்போது நடந்த விசாரணையில் ஜான்சன் அந்த சகோதரி குழந்தைகளை தலையை பல முறை தரையில் அடித்து தாக்கியதாக ஒப்புக்கொண்டார்,., பின்னர் போலீசார் அவரை சிறையிலடைத்து அவர் மீது சிறுவர் துஷ்பிரயோக வழக்கையும் பதிந்துள்ளார்கள்