கணக்கே இல்லாமல் கருணைக்கொலை; சிக்கிய அரசு மருத்துவமனை ஊழியர் - பகீர்
வயதானவர்களை விஷ ஊசி போட்டு அரசு ஊழியர் ஒருவர் கருணைக்கொலை செய்யும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கருணைக்கொலை
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை பிணவறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் 300க்கும் மேற்பட்ட வயதானவர்கள்,
மீள முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை விஷ ஊசி போட்டு கருணைக்கொலை செய்ய பேரம் பேசும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், அவர் ஊசி போடுவதற்கு முன்னால் சாப்பிட்டால் 2 டோஸ் ஆகிவிடும். அதனால் செலவு அதிகரிக்கும்.
அதிர்ச்சி பின்னணி
எனவே கொலை செய்வதற்கு முன் சாப்பிட எதுவும் கொடுத்துவிடக்கூடாது. கையையும், காலையும் பிடித்து வாய், மூக்கில் ஊற்றும் வகையிலும் மருந்து உள்ளது. ஆள் ஒல்லியாக இருந்தால் நரம்பு நன்றாக தெரியும் 2 நொடியில் முடித்து விடலாம். ஊசி போட்ட பிறகு வழக்கமான மரணம் போல் தெரியும்.
சென்னை, பெங்களூரு வரை கருணைக்கொலை கேஸ்களுக்கு போய் வந்துள்ளேன். கணக்கே இல்லாமல் கருணைக்கொலைகளை செய்துக் கொண்டிருக்கிறேன். இன்று கூட 2 கருணைக்கொலை கேஸ்கள் கைவசம் உள்ளது.
ரூ.5000 கொடுத்தால் 2 நொடியில் கருணைக்கொலை என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கருணைக்கொலை எனக் கூறிக்கொண்டு கொலை செய்து கொண்டிருக்கும் மோகன் விஷ ஊசிகளுடன் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.