கொலை கைதி காதலியுடன் உல்லாசம்.. காவல் இருந்த காவலர்கள் - ஏன்?
சிறை கைதி காதலியுடன் விடுதியில் இருக்க போலீஸார் காவல் இருந்ததாக கூறப்படுகிறது.
சிறை கைதி
கர்நாடகாவில், இர்பான் என்ற நபர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், பச்சாகான் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பச்சாகான் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.
அதன் பிறகு கோர்ட்டிலிருந்து சிறைக்கு செல்லும் வழியில், கொலைக் குற்றவாளியை தார்வாடில் உள்ள ஒரு லாட்ஜில், தனது காதலியுடன் நேரத்தை செலவிட காவல்துறை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
காதலியுடன்...
இது தொடர்பாக வெளியான தகவலில், பெங்களூருவில் வசிக்கும் பச்சாகானின் காதலி தார்வாடில் உள்ள ஒரு லாட்ஜில் அறையை பதிவு செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவலர்கள், பச்சாகானை அவரின் காதலியுடன் நேரம் செலவிட அனுமதித்திருக்கின்றனர்.
மேலும் காவலர்களே காவல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வித்யாகிரி பகுதி காவலர்கள் அந்த விடுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
காவலர்களே காவல்!
சோதனையிட்ட காவலர்கள் பச்சா கானை அவர்களின் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவலர்கள், விசாரணைக் கைதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.