வீடு புகுந்து ரத்தம் சொட்ட, சொட்ட சப்ளையர்ஸ் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் கடந்த 10 வருடமாக கொங்குராயபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சப்ளையர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீடு திரும்பிய நாராயணசாமி வீட்டுக்கு வந்தவுடன் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து நாராயணசாமியை சரமாரியாக வெட்டித் தாக்கினர்.
இத்தாக்குதலில் நாராயணசாமி சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். நாராயணசாமி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ராஜலட்சுமி, திரிமேனி, பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
நாராயணசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நாராயணசாமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - வேப்பூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாராயணசாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடிய ஆறு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒருவரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்](https://cdn.ibcstack.com/article/a271d428-2b27-40b4-8402-783e23a46fea/25-67a712c8ab08b-sm.webp)
அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் IBC Tamil
![சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்](https://cdn.ibcstack.com/article/5ae555cf-86cc-4bea-a140-7c068a23059d/25-67a6422204521-sm.webp)