சென்னையில் பயங்கரம் - திமுக பிரமுகரின் உடலை துண்டுத் துண்டாக வெட்டி தலையை அடையாறு ஆற்றில் வீசிய அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் தவறான உறவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகரை கொலை செய்து அவரின் தலையை அடையாறு ஆற்றில் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
மணலியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் திமுக பிரமுகராக உள்ளார். இவருக்கும், சமீமா பானு என்பவருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவில் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக தன்னுடைய சகோதரனுடன் சேர்ந்து சமீமா பானு சக்கரபாணியை கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சமீமா பானு, அவரது சகோதரன் பாஷாவை கைது செய்தனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அந்த விசாரணையில், சக்கரபாணியின் உடலை துண்டுத்துண்டாக வெட்டி தலையை அடையாறு ஆற்றிலும், உடலின் பிற பாகங்களை காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் வீசியதாக இருவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.
இதனையடுத்து, மீனவரின் உதவியுடன் தலையை அடையாறு ஆற்றிலும், பிற பாகங்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
தற்போது சமூகவலைத்தனங்களில், காசிமேடு துறைமுகத்தில் ஆட்டோவில் வந்து சக்கரபாணியின் உடல் பாகங்களை கடலில் கொட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.