என் கணவரை வெட்டும்போது 100 பேர் வேடிக்கைப்பார்த்தார்கள்... ஒருத்தர் கூட வரவில்லை... - கதறி அழுத முஸ்லீம் பெண்
தெலுங்கானா, ரங்காரெட்டி மாவட்டம், பில்லாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (30). இவர் ஐதராபாத்தில் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கனா போர் பகுதியை சேர்ந்தவர் செய்யது அஸ்ரி சுல்தான். கடந்த 7 ஆண்டுகளாக நாகராஜும், சுல்தானும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சுல்தான் வீட்டிற்கு தெரியவந்தது.
இதனையடுத்து, சுல்தான் பெற்றோர் நாகராஜுடன் போனில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தனர். வீட்டிலிருந்து தப்பிய சுல்தான் ஐதராபாத்தில் நாகராஜிடம் சென்றார்.
இதனையடுத்து, 2 பேரும் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். வீட்டை விட்டு வெளியேறிய சுல்தானால் பெற்றோரும், சகோதரர்களும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். சுல்தானை பல இடங்களில் தேடிய பின் ஐதராபாத்திற்கும் தேடி வந்தனர். சுல்தான் சகோதரர்கள் தேடுவதை அறிந்த நாகராஜ் வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
இதனையடுத்து, சுல்தானை அழைத்துக் கொண்டு விசாகப்பட்டணத்திற்கு சென்றார். கடந்த 4 மாதங்களுக்கு மேல் சுல்தான் பெற்றோர் அமைதியாக இருந்ததால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஐதராபாத்திற்கு வந்தார். ஐதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துக்கொண்டிருந்தார் ராகராஜூ.
இரண்டு நாட்களுக்கு முன், நாகராஜ் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பைக்கில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது, நாகராஜை பின்தொடர்ந்து வந்த சுல்தான் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் பைக்கில் சென்ற நாகராஜ் மீது கடப்பாரையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த நாகராஜ் பைக்கிலிருந்து கீழே விழுந்தார்.
இதனையடுத்து, நாகராஜை கடப்பாறையால் சரமாரியாக அக்கும்பல் குத்தி தாக்கியது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக, ஐதராபாத் போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சுல்தான் சகோதரரை கைது செய்தனர். ஆனால், அவரது நண்பர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
கைதான சுல்தான் சகோதரர்கள் போலீசாரிடம் கூறுகையில் -
எங்கள் எதிர்ப்பையும் மீறி மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் நாகராஜனை கவுரவ கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் சுல்தானா பேட்டியில் கதறி அழுதுள்ளார்.
பேட்டியில் அவர் கூறியதாவது -
என்னை திருமணம் செய்து கொண்டால் உன்னை கொன்று விடுவார்கள் என்று நான் நாகராஜனிடம் சொன்னேன். ஆனால் அதற்கு அவர் வாழ்ந்தாலும் உன்னோடு தான் இறந்தாலும் உன்னோடு தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டார். நான் அன்றைக்கு பயந்தது போலவே இன்று நடந்து விட்டது.
கொலை வெட்டும்போது, அவரை விட்டு விடுமாறு எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். கதறி பார்த்தும் என் கண் முன்னாலேயே அவரை கொடூரமாக கொலை செய்து விட்டார்கள். நாகராஜை கொலை செய்யும் போது 100க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை. யாராவது உதவிக்கு வந்து இருந்தால் இன்று என் கணவர் உயிருடன் இருப்பார். என் கணவரை கொலை செய்த சகோதரர் உள்ளிட்டோருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கண்ணீருடன் கதறி அழுதார்.
சுல்தான் கதறி அழுததைப் பார்த்து அங்கிருந்தவர்களின் நெஞ்சம் கணத்து விட்டது.
