கரையை கடந்தது முரசு புயல்

Cyclone
By Fathima Nov 03, 2026 03:43 AM GMT
Report

இன்று (நவ. 3) அதிகாலை ஒங்கோலுக்கு அருகே கரையைக் கடந்தது முரசு புயல்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முரசு புயல் இன்று அதிகாலை 3.30 மணிமுதல் 5.30 மணிக்குள் ஒங்கோலுக்கு அருகே கரையை கடந்தது.

காலை 5.30 மணிநிலவரப்படி ஒங்கோலுக்கு அருகில், பாபட்லாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தென்மேற்கே சுமார் 40 கி.மீ. தொலைவிலும், காவலியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) வடக்கு-வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) மேற்கு-தென்மேற்கே 120 கி.மீ. தொலைவிலும், நெல்லூரிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) வடக்கே 130 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதுதொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், இன்று நண்பகலுக்குள் படிப்படியாக புயலாக வலுவிழந்து, இன்று நள்ளிரவுக்குள் வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடந்தது முரசு புயல் | Murasu Cyclone Crossed Storm