கரையை கடந்தது முரசு புயல்
இன்று (நவ. 3) அதிகாலை ஒங்கோலுக்கு அருகே கரையைக் கடந்தது முரசு புயல்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முரசு புயல் இன்று அதிகாலை 3.30 மணிமுதல் 5.30 மணிக்குள் ஒங்கோலுக்கு அருகே கரையை கடந்தது.
காலை 5.30 மணிநிலவரப்படி ஒங்கோலுக்கு அருகில், பாபட்லாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தென்மேற்கே சுமார் 40 கி.மீ. தொலைவிலும், காவலியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) வடக்கு-வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) மேற்கு-தென்மேற்கே 120 கி.மீ. தொலைவிலும், நெல்லூரிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) வடக்கே 130 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இதுதொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், இன்று நண்பகலுக்குள் படிப்படியாக புயலாக வலுவிழந்து, இன்று நள்ளிரவுக்குள் வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan