கரையை கடந்தது முரசு புயல்

Cyclone
By Fathima Nov 03, 2026 03:43 AM GMT
Report

தீவிர புயலான முரசு, இன்று (நவ. 3) அதிகாலை ஒங்கோலுக்கு அருகே கரையைக் கடந்தது.  

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

தீவிர புயலான 'முரசு' இன்று காலை 3:30 மணி முதல் 5:30 மணிக்குள் (இந்திய நேரப்படி) தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையில், ஒங்கோலுக்கு அருகில் கரையைக் கடந்தது.

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையிலும், அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் இருந்தது.

கரையை கடந்தது முரசு புயல் | Murasu Cyclone Crossed Storm

இன்று காலை 5:30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதியில், ஒங்கோலுக்கு அருகில் மையம் கொண்டு இருக்கிறது.

இது பாபட்லாவிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தென்மேற்கே சுமார் 40 கி.மீ. தொலைவிலும், காவலியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) வடக்கு-வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) மேற்கு-தென்மேற்கே 120 கி.மீ. தொலைவிலும், நெல்லூரிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) வடக்கே 130 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், இன்று நண்பகலுக்குள் படிப்படியாக புயலாக வலுவிழந்து, இன்று நள்ளிரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.