பிரபல சினிமா படத் தயாரிப்பாளர் முரளிதரன் உயிரிழந்தார்... - சினிமாத்துறையினர் அதிர்ச்சி...!

Death
By Nandhini Dec 01, 2022 11:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல சினிமா படத்தயாரிப்பாளர் முரளிதரன் உயிரிழந்த சம்பவம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் முரளிதரன்

முன்னணி நடிகர்களான கமல், விஜய் , சூர்யா உள்ளிட்ட பலரின் படங்களைத் தயாரித்த நிறுவனம் 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்'. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான முரளிதரன் சமீப காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் தமிழ் சினிமா திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் முரணிதரனுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   

muralitharan-death