சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழட்டும் - கே.பி.முனுசாமி
சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழட்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தர்மபுரியில் உள்ள தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்து செல்ல கால்வாய் அமைக்கும் பணி என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.
மேலும் கே.பி.முனுசாமியின் நிலம் அங்கு உள்ளதால் அவர் அந்த திட்டத்தை தடுப்பதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தன் மீதான குற்றச்சாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால், தான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று கூறியுள்ளார்.
சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா நல்ல ஆரோக்கியத்துடன் வாழட்டும். அவரது குடும்பத்தினருக்கு சேவை செய்யட்டும் என்று அவர் தெரிவித்தார்.