தன்னை விட 9 வயது சிறிய நடிகருடன் பிரபல நடிகை காதல்...!
நடிகர் ராஜ் அனத்கத்தை காதலிப்பது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு நடிகை மூன்மூன் தத்தா சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மூன்மூன் தத்தா, தன்னுடன் தாரக் மேத்தா கா ஊல்டா சஷ்மா தொடரில் சேர்ந்து நடித்து வரும் ராஜ் அனத்கத்தை காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
மூன்மூன் தத்தா ராஜை விட 9 வயது பெரியவர் என்பதால் இந்த காதல் தகவல் இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் கடுப்பான மூன்மூன் தத்தா, தன்னை இந்தியாவின் மகள் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுவதாக தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் கேரக்டரை அசிங்கப்படுத்தி பேசியதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், உங்களிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் கமெண்ட் பகுதியில் இந்த அளவுக்கு மோசமாக கருத்து தெரிவித்து, அதுவும் படித்தவர்கள் கூட இப்படி செய்து நாம் முன்னேறாத சமூகம் என்று நிரூபித்துவிட்டீர்கள் என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். நீங்கள் கிண்டல் செய்வதால் ஒருவருக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு கவலை இல்லை.
13 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன். ஆனால் என்னை அசிங்கப்படுத்த 13 நிமிடம் கூட ஆகவில்லை. அடுத்த முறை யாருக்காவது மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ உங்களின் வார்த்தைகள் தான் அதற்கு காரணமா என்று சிந்தித்துப் பாருங்கள் என மூன்மூன் தத்தா மேலும் தெரிவித்துள்ளார்.