திருச்சி, திருப்பூர், கடலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு - வாக்குப்பதிவு தாமதம் - மக்கள் அவதி
திருச்சி, திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதமாக துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், மாநகராட்சி 42வது வார்டில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால், புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
திருச்சி மாநகராட்சி 23 வார்டு மற்றும் 281-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மேலும், கடலூர் மாநகராட்சி 5-வது வார்டில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதானதால் அரை மணி நேரமாக வாக்குப்பதிவு தாமதமானது.
அதேபோல் பவானிசாகர் பேரூராட்சியில் வாக்குப்பதிவு தொடங்கிய 1 மணி நேரம் ஆகியும் இன்றும் வாக்காளர்கள் யாராலும் வாக்களிக்க வராததால், வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.