உடல் அல்லாது விரலால் பாலியல் வன்கொடுமை செய்தாலும் கற்பழிப்பு தான் - அதிரடி தீர்ப்பு!

court mumbai order abuse case
By Anupriyamkumaresan Jul 19, 2021 10:16 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

மும்பையைச் சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவர், மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்ததாக செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த வாலிபர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில், பெண்ணுடன் நான் உடலுறவு கொள்ளவில்லை என்றும், பெண்ணை தொட்டால் எப்படி அது கற்பழிப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

உடல் அல்லாது விரலால் பாலியல் வன்கொடுமை செய்தாலும் கற்பழிப்பு தான் - அதிரடி தீர்ப்பு! | Mumbai Sexual Abuse Case Court Order

இந்த மனு நீதிபதி ரேவதி மோகிதே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தடயவியல் ஆய்வில் பெண் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள், உடல் உறவு வைக்காமல் விரலால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்பு தான். அதுவும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ் தான் வரும் என அதிரடி தீர்ப்பை அளித்துள்ளனர்.

உடல் அல்லாது விரலால் பாலியல் வன்கொடுமை செய்தாலும் கற்பழிப்பு தான் - அதிரடி தீர்ப்பு! | Mumbai Sexual Abuse Case Court Order

மேலும் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனையை மும்பை நீதிமன்றம் உறுதியளித்துள்ளதையடுத்து, குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.