ஜி 20 எதிரொலி...இது வரை இல்லாத உயரத்தில் இந்திய பங்குச்சந்தை புள்ளிகள்...!!

India Mumbai
By Karthick Sep 12, 2023 04:41 AM GMT
Report

நடைபெற்று முடிந்த ஜி 20 மாநாட்டின் எதிரொலியாக இன்று காலை ,முதலே இந்திய பங்குச்சந்தை இதுவரை இல்லாத உட்சத்துடன் துவங்கி இருக்கின்றது.

மும்பை பங்குச்சந்தை

இன்று காலை துவங்கும் போதே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை நிப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம்.

mumbai-sensex-reaches-historical-high-points-

இது வரை இல்லாத ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன. இந்திய பங்குசந்தைகளில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளதே காரணம். இந்திய பங்குசந்தைகளில் நேற்று அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.1473 கோடி முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி 20 மாநாட்டின் எதிரொலி

அதே போல உள்நாட்டு நிதி நிறுவனங்களின் பங்குசந்தைகளில் நெடு ரூ.366 கோடி முதலீடு செய்துள்ளனர். இதன் காரணமாக, ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம், ஜூலை மாதத்தில் இருந்து 7.44%-ஐ விட குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mumbai-sensex-reaches-historical-high-points-

ஜீ 20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க மண்டலத்தை இணைத்தும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார பாதையில் வர்த்தகம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.