‘‘என் காதலியை பார்க்க போகணும்னா என்ன கலர் ஸ்டிக்கர் ஓட்டனும்"- மும்பை போலீசிடம் வம்பிழுத்த மும்பை இளைஞர்

police mumbai
By Irumporai Apr 22, 2021 12:15 PM GMT
Report

மும்பையில் ஊரடங்கு நேரத்திலும், காதலியை சந்திக்க விரும்பும் ஒரு நபருக்கு மும்பை காவல்துறை சரியான பதிலைக் கொடுத்துள்ளது.

மும்பையில்,கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஊரடங்கின் போது சிவப்பு,பச்சை,மஞ்சள் ஆகிய வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்படும் என் மும்பை காவல்துறை இந அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,மும்பையில் வசிக்கும் அஸ்வின் வினோத் என்பவர் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டுள்ளார்.அதாவது,ஊரடங்கு நேரத்தில் என் காதலியைச் சந்திக்க வெளியே செல்லும் போது வாகனத்தில் ஸ்டிக்கரின் எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்? என்று மும்பை மாநகர காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.

இதற்கு, மரியாதையாக பதில் கொடுத்துள்ள மும்பை காவல்துறை : உங்கள் காதலியை நேரில் சந்திக்க ஆசைபடுவது உங்களுக்கு இன்றியமையாதது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

அதே சமயம் துரதிர்ஷ்டவசமாக இது எங்களது அவசர சூழ்நிலைகளின் கீழ் வராது.மேலும்,தூரம் தான் காதலை வளர்க்கும்.அதனால் தற்போது,நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்.

நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க வாழ்த்துகிறோம் என்று கூறிப் பதிலளித்துள்ளது. கொரோனா ஊரடங்கில் காதல் வேண்டாம் என கூறவில்லை காதலியை சந்திக்க விரும்புவது இந்த சமயத்தில் அத்தியாவசியமற்ற நடவடிக்கை என்பதை,மும்பை காவல்துறை அஸ்வினுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.