ஐயா நான் நிலாவுல மாட்டிக்கிட்டேன் நெட்டிசனின் போஸ்ட் : வேறலெவல் ரிப்ளை கொடுத்த போலிஸ்
சந்திரனில் சிக்கி இருக்கிறேன் என்று தகவல் தெரிவித்தவருக்கு மும்பை போலீஸார் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளனர்.
வைரலாகும் பதிவு
சமூக வலைத்தளங்களில் பல பதிவுகள் வைரலாகும் , குறிப்பாக ட்விட்டர் பதிவுகள் வைரலாகும் அந்த வகையில் மும்பை காவல்துறை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தது.

அதில் பொதுமக்கள் யாரேனும் ஆபத்தான நிலையில் இருப்பதாக உணர்ந்தால், உடனடியாக காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100க்கு போன் செய்யவும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலவில் உள்ளேன்
இந்த பதிவில் பி.எம்.எஸ். கான் என்பவர் நான் இங்குசிக்கி உள்ளேன் என்றும் அத்துடன் சந்திரனில் விண்வெளி வீரர் ஒருவர் நிற்பதுபோன்ற படத்தை பகிர்ந்திருந்தார்.
I got stuck here. pic.twitter.com/jCDWkHGHSc
— B.M.S.Khan (@BMSKhan) January 30, 2023
இதற்கு மும்பை போலீஸார் பதில் அளிக்கையில், இது எங்கள் எல்லைக்குள் வராது. ஆனால், சந்திரனுக்கும் நாங்கள் வருவோம் என நம்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என நகைச்சுவையாக பதிவிட்டனர்.

இதைப் பார்த்த இணைய வாசிகள் பலர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகின்றது.