ரியல் ஹீரோ! 22 லட்ச ரூபாய் காரை விற்று நோயாளிகளுக்கு உதவும் இளைஞர்
மும்பையின் மலாட் நகரை சேர்ந்தவர் ஷாஹனாவாஸ் ஷேக், ஆக்சிஜன் மேன் என அப்பகுதியில் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இதற்கு காரணம், ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படுவதை பார்த்த ஷாஹனாவாஸ் ஷேக், தனக்கு சொந்தமான 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை விற்றுவிட்டாராம்.
இந்த பணத்தில் சுமார் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார், ஆக்சிஜன் தேவைப்படும் நபர்களில் ஷாஹனாவாஸ் ஷேக்கை, தொடர்பு கொண்டால் ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதுடன், அதனை எப்படி பயன்படுத்துவது எனவும் சொல்லிக் கொடுக்கிறார்.

இதற்காக குழுவொன்றை அமைத்ததுடன், ஹெல்ப்லைன் நம்பரையும் உருவாக்கியுள்ளார், கடந்தாண்டை விட இந்தாண்டு ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுவதாகவும், தினந்தோறும் 500 முதல் 600 தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, உடல்நலக்குறைவு காரணமாக இருந்த தனது நண்பரின் மனைவி ஆட்டோவில் செல்லும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்ட சம்பவம் தன் மனதை வெகுவாக பாதித்ததாகவும், இதுவே மக்களுக்கு உதவி செய்ய காரணம் எனவும் விவரிக்கிறார்.

