விரைவில் இந்திய அணியில் அடுத்த ரெய்னா - சூசகம் சொன்ன ரோகித் சர்மா
இந்தியாவில் சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு இடது கை பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைக்கவில்லை.
திலக் வர்மா
தற்போது அந்த இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் திலக் வர்மா நல்ல தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சீசனில் ஆர் சி பி அணிக்கு எதிராக 46 பந்துகளில் 84 ரன்கள் அடித்த திலக் வர்மா சிஎஸ்கேவுக்கு எதிராக 18 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.
இதைப் போன்று டெல்லி அணிக்கு எதிராக முக்கிய கட்டத்தில் 29 பந்துகளில் 41 ரன்களை விளாசிய திலக் வர்மா கேகேஆர் அணிக்கு எதிராக 25 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் சேர்த்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவருமான ரோஹித் சர்மா,
ரோகித் தகவல்
திலக் வர்மா ஆட்டத்தை அணுகும் முறை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறினார்.மேலும் திலக் வர்மாவை மற்ற அணிகளிலும் நாம் சீக்கிரம் பார்க்கலாம் என்று கூறி சிரித்தார். தொடர்ந்து, தனது வெற்றி குறித்து பேசிய திலக் வர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி தமக்கு ஆதரவு அளித்து உதவுவதாக கூறினார்.
தாம் இளம் வீரர் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் மதிப்பதாகவும் சச்சின், ரோஹித் ஆகியோர் தமக்கு முக்கிய அறிவுரை வழங்குவது தனது பேட்டிங்கிற்கு மிகவும் உதவியதாக தெரிவித்துள்ளார்.