முதலிடம் பிடித்த சென்னை, மும்பை அணிகள் : ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Chennai Super Kings Mumbai Indians TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan Apr 27, 2022 11:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 14 முறை நடந்துள்ள ஐபிஎல் ஐபிஎல் தொடரில் சென்னை அணி 4 முறையும் மும்பை அணி அதிகபட்சமாக 5 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நடப்பு சீசனில் மோசமான தோல்வியால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள சென்னை , மும்பை அணிகள்  புள்ளிபட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளது.குறிப்பாக மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

இதனிடையே சென்னை, மும்பை அணிகள் மோசமாக விளையாடினாலும் அதன் மதிப்பு குறையவில்லை. இது போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில்  அதிக விலை மதிப்பு கொண்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் ரூ. 9962 கோடி ரூபாய் உடன் முதலிடத்திலும்,  சென்னை அணி ரூ. 8811 கோடி ரூபாயுடன் 2வது இடத்திலும் உள்ளது.

கொல்கத்தா அணி ரூ. 8428 கோடி ருபாயுடன் 3வது இடத்திலும், லக்னோ அணி ரூ. 8236 கோடியுடன் 4-வது இடத்திலும், டெல்லி அணி ரூ. 7930 கோடியுடன் 5வது இடத்திலும், பெங்களூரு ரூ.7853 கோடியுடன் 6வது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் அணி ரூ.7662 கோடியுடன் 7வது இடத்திலும், ஹைதராபாத் அணி ரூ.7432 கோடியுடன் 8வது இடத்திலும் உள்ளது. பஞ்சாப் அணி ரூ.7087 கோடியுடன் 9வது இடத்திலும், குஜராத் அணி ரூ.6512 கோடியுடன் 10வது இடத்திலும் உள்ளது.