உலகின் தலைசிறந்த டி20 அணியை தேர்வு செய்த மைக்கேல் வாகன்

Mumbai Indians Michael Vaughan Ipl 2021
By Petchi Avudaiappan Jun 02, 2021 12:01 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

உலகின் தலைசிறந்த டி20 அணி எது என்பது குறித்த தனது கருத்தை இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். 

கொரோனா காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

உலகின் தலைசிறந்த டி20 அணியை தேர்வு செய்த மைக்கேல் வாகன் | Mumbai Indians Is The Best T20 Team

இதனிடையே இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் உலகின் தலைசிறந்த டி20 அணி மும்பை இந்தியன்ஸ் அணி தான் என புகழாரம் சூட்டியுள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ரோகித் சர்மா மிக சிறப்பாக அணியை வழிநடத்தி 2013ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார் என்றும் , மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலும் அந்த அணி சிறப்பாக செயல்படும் என தான் நம்புவதாகவும் மைக்கேல் வாகன் தெரிவித்தார்.