ரிஷப் பண்டின் ஒரு தவறான முடிவால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய டெல்லி அணி - ரசிகர்கள் கோபம்

Delhi Capitals Mumbai Indians IPL 2022 Rishabh Pant
1 மாதம் முன்

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி தோற்றதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரோமென் பவல் 43, கேப்டன் ரிஷப் பண்ட் 39, ப்ரித்வி ஷா 24 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் இஷான் கிஷன் 48, டிவால்ட் ப்ரிவிஸ் 37, டிம் டேவிட் 34 ரன்கள் விளாச 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லியை மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி வீரர்  டிம் டேவிட்க்கு நடுவர் அவுட் தர மறுத்த நிலையில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் டிஆர்எஸ் முடிவு கேட்காமல் விட்டது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவே இப்போட்டியில் டெல்லி அணி தோற்க காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.