மும்பை அணியிலிருந்து விலகிய 3 வீரர்கள் - நுழைந்த அதிரடி வீரர்

Mumbai Indians IPL 2025
By Sumathi May 21, 2025 08:45 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் விலகிய நிலையில், மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலகிய வீரர்கள்

ஐபிஎல் தொடர் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் நிறுத்தபட்டபோது, பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

mumbai indians

இந்நிலையில் பல வீரர்கள் தங்களது ஐபிஎல் அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த மூன்று முக்கிய வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பவில்லை. வில் ஜாக்ஸ், தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டர் கார்பின் போஸ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பவில்லை.

ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்? பிசிசிஐ முடிவு!

ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்? பிசிசிஐ முடிவு!

யாரெல்லாம் மாற்று?

இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. அதன்படி, வில் ஜாக்ஸுக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ஜானி பாரிஸ்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியிலிருந்து விலகிய 3 வீரர்கள் - நுழைந்த அதிரடி வீரர் | Mumbai Indians 3 Players Left The Team Ipl 2025

ரியான் ரிக்கில்டனுக்கு பதிலாக ரிச்சர்ட் கிலீசன் என்ற வீரரை சேர்த்துள்ளனர். மேலும், ஆல்ரவுண்டர் கார்பின் போஸுக்கு பதிலாக இலங்கை வீரர் ஷரீத் அசலங்காவை மும்பை அணி சேர்த்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

மீதம் இரண்டு போட்டிகள் உள்ளது. ஒன்று லக்னோ அணியுடனும் மற்றொன்று டெல்லி அணியுடனும் இருக்கிறது. குறிப்பாக டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் பிளே ஆஃப் சுற்றுக்கு இந்த அணியால் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.