ரெட் அலர்ட்; ரூ.20 கோடிக்கு வீடு வாங்கினாலும் வெள்ளத்தில்தான்.. 21 பேர் பலி!

Mumbai Death Rain
By Sumathi Aug 20, 2025 06:37 AM GMT
Report

கனமழைக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

கனமழை

மும்பையில் 4வது நாளாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. தானோ, பால்கர், ராய்கட், ரத்னகிரி என பல பகுதிகள் வெள்ளக்காடாகின.

mumbai

இதனால் போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தொடர்ந்து ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக வெள்ளநீரின் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.

ரயில்வேயில் இந்த 5 சேவைகள் முற்றிலும் இலவசம் - எதெல்லாம் தெரியுமா?

ரயில்வேயில் இந்த 5 சேவைகள் முற்றிலும் இலவசம் - எதெல்லாம் தெரியுமா?

21 பேர் பலி

4 நாட்களில் கொட்டிய மழைக்கு மொத்தம் 21 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவிலேயே வீடு, நிலம் ஆகியவற்றின் விலை மும்பையில்தான் மிக மிக அதிகம் எனலாம். இதில் X தள பயனர் மழை நீர் தேங்கியிருக்கும் பகுதி ஒன்றின் வீடியோ பதிவிட்டு

அதில், "இதுதான் தெற்கு மும்பை - பிரபாதேவி, இங்கு ஒரு வீட்டின் வாங்க ரூ.15 கோடி - ரூ.20 கோடி வைத்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். அதிக விலைமதிப்பான வீடுகள், குடியிருப்புகள் இருக்கும் பகுதி கூட மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு அடுத்த 2 நாள்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்களில் மட்டும் மும்பையில் பல பகுதிகளில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.