MI vs DC : அதிரடியாக ஆடிய இஷான் கிஷண் ; டெல்லி அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
15 வது ஐபிஎல் சீசனுக்கான போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
இதில், சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது.
இந்த சீசனின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து மும்பை அணி பேட்டிங் செய்தது.
இந்நிலையில் தொடக்க வீரராக கலமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 32 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ரோகித் ஷர்மாவை தொடர்ந்து அன்மோல் பிரீத் சிங், கைரன் போல்லார்டு, திலக் வர்மா ஆகியோர் ஆட்டம் இழக்க, 17 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது மும்பை அணி.
அதிரடி காட்டி ஆடிய இஷான் கிஷன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து 48 பந்துகளில் 81 ரன்கள் அடித்து விலாசினார்.
முதல் சுற்றுவின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 177 ரன்கள் குவித்த மும்பை அணி, டெல்லி அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.