எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பயங்கர விபத்து.. 3 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து..
மும்பை, ஜாவ்லே கிராமத்தில் நேற்று தீபாவளி பண்டிகை அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால், ஒரு கிராமத்திற்கு மட்டும் பண்டிகை துக்க நாளாக மாறியுள்ளது. அதாவது அங்கு உள்ள ஒரு மளிகைக் கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தாய், மகன், மகள் என மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து கிலோ எடையுள்ள மூன்று சிலிண்டர்கள் அந்த கடையில் வெடித்ததில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
மேலும் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துபிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கடையில் திருட்டுத்தனமாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இதன் தீவிரத்தை உணர்ந்த அவர்கள் எதனால் விபத்து நிகழ்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது! Manithan
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகப்போகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல் IBC Tamil
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil