Levi's நிறுவன தயாரிப்புகளை போலியாக தயாரித்த தொழிற்சாலை - வாடிக்கையாளர்கள் ஷாக்

Crime Mumbai
By Sumathi Apr 18, 2023 09:25 AM GMT
Report

லெவிஸ் தயாரிப்புகளுக்கு ஈடாக போலி தயாரிப்புகள் செய்தது தெரியவந்துள்ளது.

லெவிஸ் 

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல ஆடை நிறுவனம் லெவிஸ். இதற்கு மக்கள் மத்தியில் மதிப்பு அதிகம். இந்நிலையில், மும்பையில் உள்ள ஸ்மிதா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது

Levi

அங்கு லெவிஸ் பெயரிலான போலி டீசர்டுகளும், அதை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக மும்பையில் உள்ள திறந்தவெளி சந்தைகள், கடைகள், மால்கள் போன்றவற்றில்

போலி தயாரிப்பு

லெவிஸ் பெயரிலான போலி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அதனையடுத்து, நிறுவன உரிமையாளரான 35 வயது இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

Levi

தொடர்ந்து, இதற்கும் போலி பிராண்டட் ஆடைகளை தயாரிக்கும் மாஃபியா கும்பலுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.