"நோயாளிகள் படும் கஷ்டத்தைப் பார்க்க முடியவில்லை"..மும்பை மருத்துவரின் கண்ணீர் காணொளி

corona doctor patient mumbai
By Praveen Apr 21, 2021 03:13 PM GMT
Report

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அவஸ்தைப் படுவதைப் பார்த்தும் எதுவும் செய்யமுடியவில்லை என மருத்துவர் ஒருவர் கண்ணீர் காணொளி வெளியிட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த தொற்று நோய் நிபுணர் டாக்டர் துருப்தி கிலாடா மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி, ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில், மருத்துவர்கள் அனைவருமே மன அழுத்தத்தில் இருப்பதாக கூறிய கிலாடா, கண் முன்னே நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்தும் உதவ முடியாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாகவே உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.