5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..!
சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை அணி. 15வது ஐபில் போட்டி சீசன் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்ந போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.
இதில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.அதேபோல் மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானர்.
பின்னர் வந்த ராபின் உத்தப்பா 1 ரன்களில்,ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதன் பின் களம் இறங்கி தோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
16 ஓவர் முடிவில் சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சென்னை அணியில் தோனி அதிகபட்சமாக 36 ரன்களை எடுத்திருந்தார்.மும்பை அணி வீரர் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களம் இறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 18 ரன்களிலும்,கிஷான் 6 ரன்களிலும் அவுட்டாகினர்.
பின்னர் வந்த திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி 34 ரன்கள் எடுத்தார்.மும்பை அணி 14.5 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.