மும்பை பறந்துள்ள நடிகர் சிம்பு - சிம்புவா இது என ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்திற்கு ஜெயமோகன் எழுத்தாளராக இணைந்துள்ளார். நடிகை ராதிகா இந்தப் படத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். கன்னட நடிகை கயது லோஹர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சிம்பு போஸ்டரில் மிரட்டலான பார்வையுடன் எரியும் காட்டில் சிறு வயது தோற்றத்தில் மிரட்டியிருந்தார்.
ஏற்கனவே உடல் எடை குறைந்து பிட் ஆக மாறியிருந்த சிம்பு இந்தப் படத்திற்காக மேலும் தீவிர உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளராம்.
தற்போது இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. நேற்று சிம்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாகத் தெரிந்து விமானத்தின் இருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சிம்பு மும்பையில் காணப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.