20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து : இரண்டு பேர் படுகாயம்

hospital mumbai firebuilding
By Irumporai Jan 22, 2022 04:33 AM GMT
Report

மும்பை, பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் உள்ள டார்டியோவில் உள்ள 20 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது மாடியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அதன்படி,காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..

20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து : இரண்டு பேர் படுகாயம் | Mumbai A Fire Broke 20 Building Patiala Hospital

இதனைத் தொடர்ந்து,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.இதனையடுத்து,தீ அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்,இந்த தீ விபத்தினால் 2 பேர் படுகாயம் அடைந்து அவர்கள் பாட்டியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்,கட்டிடத்திற்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்று தேடும் பணியிலும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.