வெவ்வேறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகள் - அமெரிக்காவில் விநோதம்

america twins baby
By Petchi Avudaiappan Jan 03, 2022 11:23 PM GMT
Report

அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது ஒரு வருடமே மாறிப்போன நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இது சாதாரண நிகழ்வு என்றாலும், குழந்தைகள் பிறந்த நேரம் வித்தியாசமாக அமைந்துள்ளது. அதாவது முதல் குழந்தை டிசம்பர் 31 2021 இரவு 11.45 மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக‌ நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது. இதனால் 15 நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வருடமே மாறிப்போய் உள்ளது.

இது அரிதினும் அரிதான நிகழ்வு....எங்களது பணி காலத்தில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிரசவம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் தனது இரட்டைக்குழந்தைகள் வெவ்வேறு வருடத்தில் பிறந்திருப்பது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருவதாக தாய் பாத்திமா மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.