கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

india government tamilnadu
By Jon Feb 20, 2021 05:35 AM GMT
Report

தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதி மன்றத்தில் அனைத்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த்து.வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி. கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல், வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.