முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது : கேரள அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்
முல்லை பெரியாறு அணையின் அருகே வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதாக கேரளா முதல் அமைச்சர்க்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் பதில் கடிதம்
முல்லை பெரியாறு அணையின் அருகே மற்றும் அதன் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அணை பாதுகப்பாக உள்ளது
அந்த கடிதத்தில் முல்லை பெரியாறு அணையின் மதகுகளின் திறப்பை குறித்து கேரளா அரசாங்கத்திடம் 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க பட வேண்டும் என பினராயி விஜயன் கடிதத்தில் கூறியிருந்தார்.
இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "கேரளா மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு என்றும் உறுதி செய்யும் என கூறியுள்ளார் , மேலும் விதிகளின் அடிப்படியில் தான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலிம் தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.