முல்லைப் பெரியாறு தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது : அறிக்கை விட்ட துரைமுருகன்

duraimurugan dam mullaiperiyar
By Irumporai Oct 29, 2021 12:42 PM GMT
Report

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க வழங்கிய ஆணையின் படி மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப்பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழ்நாடு கண்காணித்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், கேரளாவைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 28.10 2021ல் தமிழ்நாட்டின் வாதங்களை கேட்ட பின்னர் 11 .11. 2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வரைக்கும் மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல் அளித்துள்ள இணைக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றுமாறு ஆணையிட்டிருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகைப்பாதை வழியாக கடத்துகிறது தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளார்.

 மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே செய்யப்படுகிறது என்றும் , முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், மத்திய நீர்வளத் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தான் தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை பணியினை கவனமாக இயக்கிய வருகிறது என்றும்  துரைமுருகன், தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை நிலையான வழிகாட்டுதலின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பதை மீண்டும் வலியுறுத்தப் படுகிறது என்று அவர் அழுத்தமாக கூறியிருக்கிறார்.