பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் பிரபல நடிகை? - சோகத்தில் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்று தகவல் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சின்னத்திரையில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த சீரியலில் வரும் கதாபாத்திரங்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் போன்று இருப்பதால் தான் இத்தனை வரவேற்பு. 

இதனிடையே  முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறார் என்று தகவல் வெளியானது. மேலும்  காவ்யாவுக்கு பதில் அபிநயா நடிப்பார் என்றார்கள்.

முன்னதாக வி.ஜே. சித்ரா தான் முல்லையாக நடித்து வந்தார். அவர் இறந்த பிறகு காவ்யாவை முல்லையாக்கினார்கள். சித்ரா இறந்த பிறகு முல்லை கதாபாத்திரம் மீதான பிடிப்பு போனது.தற்போது காவ்யாவும் மாறினால் அவ்வளவு தான் என்று நினைத்தபோது தான் இது குறித்து தயாரிப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முல்லையாக நடிக்கும் காவ்யா விலகவில்லை என்றும்,  அவரின் தோழியாக அபிநயா நடிக்கப் போகிறாராம் என்றும் கூறப்படுகிறது.

சமீப காலமாக நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் இருந்து நடிகர்கள், நடிகைகள் விலகுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் காவ்யா பற்றி வெளியான தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்