சின்னத்திரையில் சித்ரா தொடக்கம் மற்றும் இறுதியில் இப்படி தான் இருந்துள்ளார்: வைரலாகும் புகைப்படம்
மறைந்த நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் தொடக்கம் மற்றும் இறுதியில் அவர் இருந்த தோற்றத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த சித்ரா அவர்கள் கடந்த முன்பு நசரத்பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு தூண்டியதாக அவரது வருங்கால கணவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு வரை அவர் நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லையாக யார் நடிக்க போகிறார்? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு விடையாக அந்த கதாபாத்திரத்தில் காவ்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடங்கியபோது இருந்த புகைப்படத்தையும் இறப்பதற்கு முன்பாக இருந்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் குறுகிய காலத்தில் இப்படி ஒரு மாற்றம் கண்ட சித்ரா. இறுதியில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாரே என சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.