தாலிபான்கள் அரசின் அதிகாரமிக்க தலைவராக முல்லா ஹெபத்துல்லா அகுந்த்ஸடா தேர்வு

government afghanistan taliban mullahbaradar
By Irumporai Sep 03, 2021 07:22 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 தாலிபான் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதரின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இதனால் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்துள்ளனர்.

ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் தற்போது நாடு திரும்பி விட்டன. இந்த நிலையில் தாலிபான்களும் தங்கள் அரசின் உச்சபட்ச தலைவராக மூத்த மத தலைவரான முல்லா ஹெபத்துல்லா அகுந்த்ஸடாவை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

இவர் காந்தஹாரில் இருந்து ஆட்சியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய அரசாங்க அமைப்பின் கீழ், ஆளுநர்கள் மாகாணங்களை கட்டுப்படுத்துவார்கள், அதே நேரத்தில் மாவட்ட ஆளுநர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாக இருப்பார்கள் என்று சமங்கனி கூறினார்.

தாலிபான்கள் ஏற்கனவே மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு ஆளுநர்கள், காவல்துறைத் தலைவர்கள் மற்றும் காவல் தளபதிகளை நியமித்துள்ளனர். அதேநேரம் புதிய நிர்வாக அமைப்புக்கான பெயர், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாலிபன்களின் ஆட்சியில் கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானில் முன்னாள் அரசாங்கங்களின் ஒரு பகுதியாக இருந்த எந்த நபரும் புதிய தாலிபான் நிர்வாகத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.