பொதுமக்கள் ரத்தம் சிந்தும் நிலை முடிவுக்கு வந்துவிட்டது : தாலிபான்கள் அறிவிப்பு

afghanistan taliban mullahmohammadhasan
By Irumporai Sep 09, 2021 05:38 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானின் தற்போதைய பிரதமர் முல்லா முகமது ஹசன் அகுந்த் நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானியர்களும் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்கானில் ஆதிக்கம் செலுத்தும் தாலிபன்கள் தற்போது அதிகாரப்பூர்வ ஆட்சியை தொடங்கியுள்ளனர்.

தற்போது ஆப்கானின் பிரதமராக தாலிபன்களின் ஆதரவு பெற்ற முகமது ஹசன் அகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள ஆப்கன் பிரதமர் முகமது ஹசன் அகுந்த், நாட்டில் சரிந்து கிடைக்கும் நிர்வாகத்தை சீரமைக்க தமது அரசு முக்கியத்துவம் அளித் படைகளுக்கு உதவிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தாலிபான்கள் அளித்துள்ள உறுதி மொழியை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொதுமக்கள் ரத்தம் சிந்தும் நிலை முடிவுக்கு வந்துவிட்டது : தாலிபான்கள் அறிவிப்பு | Mullah Mohammad Hasan Named New Afghanistan

நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானியர்களும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் அகுந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானில் நல்லாட்சியை ஏற்படுத்த தாலிபான் அமைப்பு பெருமளவு பொருள் மற்றும் உயிர் சேதங்களை சந்தித்து இருப்பதாகவும். பொதுமக்கள் ரத்தம் சிந்தும் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக கூறினார்.

இதனிடையே காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், அதில் சுற்றுசுவர்களில் தாலிபான் அமைப்பின் கோடியை பிரம்மாண்டமாக வரைந்துள்ளனர். சுவர் முழுவதும் ஆக்கிரமிப்பு முடிந்தது விடுதலை பிறந்தது என்று மீண்டும் மீட்கப்பட்ட ஆப்கானிஸ்தான் போன்ற வாசகங்களை தாலிபான்கள் எழுதி உள்ளனர்.