அல்லாஹ்வின் உதவியால் இந்த வெற்றியைப் பெற்றோம்: தாலிபான்கள்

Afghanistan Taliban Mullah Baradar
By Thahir Aug 16, 2021 08:23 AM GMT
Report

அல்லாஹ்வின் உதவியால் இந்த வெற்றியைப் பெற்றோம்,இது போன்ற வெற்றி உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை என தாலிபான் இயகத்தின் துணைத் தலைவர் முல்லா பரதார் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் விரும்பும் வண்ணம் புதிய ஆட்சியை தரப்போவதாக தாலிபான்கள் உறுதி அளித்துள்ளனர்.

ரகசியமான இடத்தில் இருந்து சர்வதேச ஊடகங்களுக்கு வீடியோ மூலமாக பேட்டி அளித்துள்ள தாலிபான் இயக்கத்தின் துணைத் தலைவர் முல்லா பரதார் இதனை தெரிவித்து இருக்கிறார். 

அல்லாஹ்வின் உதவியால் இந்த வெற்றியைப் பெற்றோம்: தாலிபான்கள் | Mullah Baradar Taliban Afghanistan

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து இருக்கும் தாலிபான்களுக்கு இது தான் சோதனை காலம் என்று குறிப்பிட்டு இருக்கும் முல்லா பரதார் , நாடு முழுவதும் அமைதியும் சிறப்பான சேவையும் தாலிபான் இயக்கம் அளிக்கும் என்று உறுதிப்பட கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'இந்த மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆப்கன் தேசத்திற்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.குறிப்பாக காபூல் மக்கள் மற்றும் முஜாஹிதீன்களுக்கு வாழ்த்துக்கள்.

நாங்கள் கடந்த வழி, எதிர்பார்க்காதது. நாங்கள் வந்து அடைந்துள்ள இடம், நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்காதது.ஆனால் நாங்கள் அல்லாவின் உதவியால் இந்த வெற்றியைப் பெற்றோம், இது போன்ற வெற்றி உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை. எனவே நாங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம்,'என்றார்.